Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மாணவர்களுக்கு ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்: ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் ஆளுநர்

மாணவர்களுக்கு ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்: ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் ஆளுநர்
திருவிடந்தையில் நடைபெற்ற ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

ஆர்ஆர்ஆர்-1, ஆர்ஆர்ஆர்-2 ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை உள்ளடக்கிய இத்திட்டம், ராக்கெட்டுகளை மீண்டும் இயக்குதல் மற்றும் மறுபற்றவைப்பு முறைகளை (Re-ignition)ஆய்வு செய்து சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

திருவிடந்தையில் நடைபெற்ற ருஹுமி ட்வின் (RHUMI TWIN) ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம், புதுமைச் சிந்தனை மற்றும் ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ஆர்ஆர்-1, ஆர்ஆர்ஆர்-2 ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை உள்ளடக்கிய இத்திட்டம், ராக்கெட்டுகளை மீண்டும் இயக்குதல் மற்றும் மறுபற்றவைப்பு முறைகளை (Re-ignition)ஆய்வு செய்து சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியும் அறிவியல் புரிதலும் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அறிவியல் ஆராய்ச்சியில் பொறுமை, துல்லியம், திட்டமிட்ட தயாரிப்பு மற்றும் குழுவாகச் செயல்படுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்கு உணர்த்தும் என்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புதுமைகளை ஊக்குவிப்பது, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவப் பட்டமளிப்பு விழா

தொடர்ந்து, சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 5-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றார். அவர் பேசும்போது, "மருத்துவப் பட்டதாரிகள் தொழில்முறைத் திறன், நேர்மை மற்றும் மனிதநேயத்துடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். குறிப்பாக, ஏழை, எளிய மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய, கட்டுப்படியாகும் மருத்துவச் சேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றத்துடன், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவையும் சமவாய்ப்புகளும் கிடைப்பது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார்.

தொடர்ந்து, பிரதமரின் திவ்யாஷா கேந்திரா திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். இவை அவர்களின் நடமாட்டம், சுயசார்பு மற்றும் அன்றாட வாழ்க்கையில் பங்கேற்பை மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி
Shalimar-Chennai Beach pooja spl train
அடுத்த செய்தி
டி-மார்ட் லாபம் ரூ.743 கோடியாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்